பரபரப்பு

ஈரோடு மேட்டூர் ரோட்டில் உள்ள தனியார் நர்சிங் ஹோமில் இருந்து கரும்புகை வெளியேறியதால் பரபரப்பு;

Update: 2025-03-10 03:17 GMT
ஈரோடு மேட்டூர் ரோட்டில் ஒரு தனியார் நர்சிங் ஹோம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை 10 மணி அளவில் திடீரென அந்த நர்சிங் ஹோமில் இருந்து கரும்புகை வெளியேறியது. பின்னர் சிறிது நேரத்தில் தீப்பற்றி எறிய தொடங்கியது. இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும் தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பு தனியார் நர்சிங் ஹோம் இல் இருந்த தீயணைப்பு கருவி மூலம் அங்கிருந்த ஊழியர்கள் தீயை அணைத்தனர். உரிய நேரத்துக்குள் விரைந்து செயல்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்தபோது அங்குள்ள ஒரு வயரில் மின் கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியில் பொதுக்கிணறு உள்ளது. நேற்று இந்த கிணற்றில் இருந்து நாய் சத்தம் போடும் சத்தம் கேட்டது. இதனை அடுத்து அப்பகுதி மக்கள் கிணற்றைப் பார்த்தபோது நாய் ஒன்று தவறி விழுந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயனைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் கயிறை கட்டி இறங்கி நாயை உயிருடன் மீட்டனர்.

Similar News