தற்கொலை

ஈரோடு அருகே இளம்பெண் கீழ்பவானி வாய்க்காலில் குதித்து தற்கொலைகுடும்ப தகராறில் விபரீத முடிவு;

Update: 2025-03-10 03:27 GMT
கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் கூடலூரை சேர்ந்தவர் ராஜா (35). கூலி தொழிலாளி. இவரது மனைவி வீனா (33). இந்நிலையில் ராஜா தனது மனைவியுடன் ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில் அருகே கருங்கரடு பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார்.ராஜாவுக்கும், வீனாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.இந்நிலையில் ராஜா கடந்த 6-ந் தேதி வெளியூர் சென்றார். வீட்டில் வீனா மட்டும் இருந்து வந்தார். அப்போது ராஜாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் மாலதி என்பவர் வீனாவை பார்க்க அவரது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. வீனாவை காணவில்லை. இது குறித்த தகவல் அறிந்து ராஜா வீட்டுக்கு வந்தார். அப்போது வீனா கழுத்தில் அணிந்திருந்த தாலி மற்றும் மெட்டி கழற்றி வைத்துவிட்டு வெளியே சென்றது தெரிய வந்தது.இதை அடுத்து அக்கம் பக்கம், உறவினர், தோழிகள் வீடுகளில் தேடி பார்த்தும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் காஞ்சி கோவில் பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் பெண்ணின் உடல் மிதந்து வருவதாக தகவல் கிடைத்தது. இதன் பெயரில் ராஜா அங்கு சென்று பார்த்த போது அது மனைவி வீனா என்பது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காஞ்சிகோவில் போலீசார் வீனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீனா குடும்ப தகராறு காரணமாக வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு என்ன காரணம்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News