கைது

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்றவர் கைது;

Update: 2025-03-10 03:37 GMT
அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருள்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, சிவகிரி போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உள்பட்ட பழனிக்காடு வலசு பகுதி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள மளிகை கடை ஒன்றில் சோதனையிட்டனர். அப்போது, அங்கு அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களான பான்மசாலா, குட்கா ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் கடை உரியமையாளரான சிவகிரி, பழனிக்காடு, ஓலப்பாளையத்தை சேர்ந்த தர்மலிங்கம் (55) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.மேலும், கடையில் விற்பனைக்கு வைத்திருந்த 20 பாக்கெட் பான்மசாலா பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.

Similar News