விழிப்புணர்வு

ஈரோடு சுதா மருத்துவமனையில் சிறுநீரக செயலிழப்பு குறித்து விழிப்புணர்வு;

Update: 2025-03-14 16:06 GMT
ஈரோடு பெருந்துறையில் சாலையில் உள்ள சுதா மருத்துவமனையில் உலக சிறுநீரக தினம் நேற்று கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, சிறுநீரக செயலிழப்பு, டயாலிசிஸ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, சுதா மருத்துவமனையின் சேர்மேன் டாக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார். சிறுநீரக மருத்துவ நிபுணர் டாக்டர் நாகேந்திரன், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கோபிநாத், ரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்து சிறுநீரக செயலிழப்பு எதனால் ஏற்படுகிறது என்பது குறித்தும், உடல் உறுப்பு தானம் செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கி கூறினர். மேலும், சுதா மருத்துவமனையில் உடல் உறுப்புகள் தானம் செய்த 6 குடும்பத்தினர்கள் கவுரவிக்கப்பட்டனர். மேலும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து நலமுடன் உள்ளவர்களுக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. 37 உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைசுதா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுதாகர், டாக்டர்கள் கோபிநாத், நாகேந்திரன் ஆகியோர் கூறியதாவது:சுதா மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பிரிவு கடந்த 2022ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தற்போது வரை 37 பேருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இதில், 26 நோயாளிகளுக்கு அவர்களது உறவினர்கள் மூலம் தானம் வழங்கிய சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும், 11 பேருக்கு மூளைச்சாவு அடைந்தவர்கள் தானமாக வழங்கிய சிறுநீரகமும் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 7 உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுதா மருத்துவமனையில் விரைவில் ஈரல், நுரையிரல், இருதயம் மாற்று அறுவை சிகிச்சைக்கான அதிநவீன அறுவை சிகிச்சை அரங்கம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. சிறுநீரக பிரச்சனை என்பது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் 6 நோயாளிகள் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், தற்போது, ஆண்டுக்கு 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிறுநீரக நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு மூலக்காரணம் நீரிழிவு(சர்க்கரை) நோய், ரத்த அழுத்தம் ஆகும். இவைகளை ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால், சிறுநீரக பிரச்சனையை முழுவதுமாக தவிர்க்கலாம், என்றனர்.

Similar News