தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் குளிருட்டும் அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மின் வயர்கள் எரிந்து நாசம்: 1வது மற்றும் 2வது அலகில் மின் உற்பத்தி நிறுத்தம் 420 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு;

Update: 2025-03-16 01:31 GMT
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் குளிருட்டும் அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மின் வயர்கள் எரிந்து நாசம்: 1வது மற்றும் 2வது அலகில் மின் உற்பத்தி நிறுத்தம் 420 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு தூத்துக்குடியில் தமிழக அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு ஐந்து யூனிட்டுக்களில் 210 மெகாவாட் வீதம் 1050 மெகாவர் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று நல்லிரவில் திடீரென குளிரூட்டும் அறையில் மின் கசைவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது இதன் காரணமாக தீ மல மல எரிந்தது உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்து தீயை அணைத்தனர் இருந்தபோதிலும் பல கோடி ரூபாய் மதிப்பிற்கான மின் வயர்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. அனல் மின் நிலையத்தில் தீ விபத்து காரணமாக 1வது மற்றும் 2வது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனல் மில்லியத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News