
அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் இந்திய அரசியலமைப்பு சட்ட கட்டமைப்பு மற்றும் தேர்தல் செயல்முறையை வலுப்படுத்துதல் குறித்து கலந்தாய்வு கூட்டம்; பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த அரசியல் கட்சியினர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர்(பொறுப்பு) கனகராஜ் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் இந்திய அரசியலமைப்பு சட்ட கட்டமைப்பு மற்றும் தேர்தல் செயல்முறையை வலுப்படுத்துதல் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய அரசியல் கட்சி பிரமுகர்கள், வாக்காளர் பட்டியலில் ஒரே நபரின் பெயர்கள் இரண்டு இடத்தில் உள்ளது இதுபோன்று இரண்டு இடங்களில் பெயர்கள் வருவதை நீக்க வேண்டும், வருவாய்த்துறை அதிகாரிகள் இறந்தவர்களின் பெயர்களை தங்களது கோப்புகளை வைத்து அதன் அடிப்படையில் நீக்க வேண்டும், இறப்புச் சான்றிதழ் வழங்கி தான் தற்போது நீக்க வேண்டி உள்ளது, ஒரு சில கிராமங்களில் வாக்குச்சாவடிகள் இல்லாமல் அருகில் உள்ள கிராமங்களுக்கு நீண்ட தூரம் நடந்து சென்று வாக்களிக்க வேண்டிய சூழல் உள்ளது எந்த கிராமங்களில் வாக்காளர்கள் உள்ளனரோ அதே கிராமங்களிலேயே வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன் வைத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் உறுதி அளித்தார்.