
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் நடைபெற்ற 55 வது ஆண்டு விழா நிகழ்ச்சி; மதுர குலுங்க என ஆட்டமாக ஆடிய மாணவ மாணவிகள்; மாணவர்களின் கண்கவர் நடன நாட்டிய நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த மாவட்ட ஆட்சியர்; ஆண்டு விழாவில் வைப் பண்ணிய மாணவ மாணவியர்கள் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 55 ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகளை கண் கவர் நடன நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் ஆட்டம் போட வைக்கும் பல குத்துப் பாடல்களுக்கு நடனமாடி பார்வையாளர்களை ரசிக்க வைத்தனர். மாணவ மானவியர்களின் கண்கவர் நடன நாட்டிய நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் கண்டு ரசித்தார். மதுர குலுங்க பாடலுக்கு மாணவிகளின் நடனத்திற்கு ஒட்டுமொத்த அரங்கமும் அதிர்ந்தது. பாடலுக்கு ஏற்றவாறு மாணவ மாணவியர்கள் சத்தம் போட்டும் நடனமாடியும் வைப் பண்ணு என மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள் பேராசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.