தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியான ஆவுடையார்புரம் பகுதியில் வீட்டின் முன்பு மூலிகைச் செடிகள் இடையே வளர்ந்த எட்டு அடி உயர கஞ்சா செடி மத்தியபாகம் காவல்துறையினர் வேரோடு பிடுங்கி சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்;

Update: 2025-04-02 12:04 GMT
  • whatsapp icon
தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியான ஆவுடையார்புரம் பகுதியில் வீட்டின் முன்பு மூலிகைச் செடிகள் இடையே வளர்ந்த எட்டு அடி உயர கஞ்சா செடி மத்தியபாகம் காவல்துறையினர் வேரோடு பிடுங்கி சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது ஆவுடையார்புரம் இங்கு இங்கு அன்புராஜ் என்பவர் வசித்து வருகிறார் இவரது வீட்டு முன்புறம் பல்வேறு மூலிகை செடிகள் வளர்ந்து வருகின்றன இதன் இடையே ஆள் உயர கஞ்சா செடி ஒன்று வளர்ந்து உள்ளது இந்நிலையில் இந்த செடி கஞ்சா செடி என்று தெரியாமலேயே மலை வேம்பு என்று நினைத்து தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்துள்ளனர் இந்நிலையில் அந்தப் பகுதியில் இன்று கட்டிட வேலைக்கு வந்து சிலர் வளர்ந்து இருப்பது கஞ்சா செடி என காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர் இதைத்தொடர்ந்து அந்த பகுதிக்கு வந்த மத்திய பாகம் காவல்துறையினர் அந்த செடியை சோதனை செய்ததில் அது கஞ்சா செடி என தெரிய வந்தது மேலும் இந்த கஞ்சா செடி சுமார் 8 அடி உயரம் வரை வளர்ந்து இருப்பது தெரிய வந்தது இதைத் தொடர்ந்து கஞ்சா செடியை காவல்துறையினர் வேரோடு பிடுங்கி மத்திய பாகம் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர் பின்னர் காவல் நிலையத்தில் வைத்து கஞ்சா செடி எத்தனை கிலோ என்பது எடை போட்டு தெரிய வந்த பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர் தூத்துக்குடி மாநகர மையப் பகுதியில் மூலிகைச் செடியுடன் எட்டடி உயர கஞ்சா செடி வளர்ந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News