அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் நேரடி பணிநியமனம் மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், அறிவிப்பு;
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம், தூத்துக்குடி மாவட்ட திட்ட அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 13 வட்டாரங்களில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 88 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 44 அங்கன்வாடி உதவியாளர்களின் காலிப்பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளது. விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும் விண்ணப்பங்கள் 07.04.2025 முதல் 23.04.2025 வரை அலுவலக வேலை நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.