ரேஷன் கடையில் பொதுமக்கள் - விற்பனையாளர் இடையே பிரச்சினை ஏற்படுவதால் பி.ஓ.எஸ். மிஷினுக்கும் எடை தராசிற்கும் உள்ள புளுடூத் இணைப்பை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-04-19 05:53 GMT
ரேஷன் கடையில் பொதுமக்கள் - விற்பனையாளர் இடையே பிரச்சினை ஏற்படுவதால் பி.ஓ.எஸ். மிஷினுக்கும் எடை தராசிற்கும் உள்ள புளுடூத் இணைப்பை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கூட்டுறவு நியாய விலைக் கடைகளின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அ.வேல்முருகேசன் மாவட்ட வழங்கல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில், "நமது மாவட்டத்தில் கிராமங்களிலும் கடலோரப் பகுதிகளிலும் ஆண்கள் பெண்கள் என இருபாலரும் உடல் உழைப்பால் வேலை செய்து வாழ்கிறார்கள். அதனால் அவர்களின் கைவிரல் ரேகை தேய்மானம் ஏற்படுகிறது. நியாய விலைக் கடையில் பி.ஓ.எஸ் மிஷினில் ஏற்கனவே நான்கு முறை விரல்ரேகை வைத்தால் தான் விற்பனை களத்தில் உள்ளே செல்ல முடிகிறது.தற்போது பி.ஓ.எஸ் மிஷினுக்கும் எடைத் தராசிற்கும் புளுடூத் இணைப்பு ஏற்படுத்தியதால் நான்காவது முறை விற்பனை களத்தில் செல்லும் முன் புளுடூத் இணைப்பு தடைபடுகிறது. இதனால் மீண்டும் வெளியே வந்து ஆரம்பத்தில் இருந்து முயற்சிக்க வேண்டியதுள்ளது. இதனால் மேலும் அதிகமாக கால தாமதம் ஏற்படுகிறது. ஒரு குடும்ப அட்டைக்கு 15 நிமிடம் வரை ஆகிறது. இதனால் குடும்ப அட்டை தாரர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் தேவையில்லாத பிரச்சினைகளும் சண்டைகளும் உருவாகிறது. ஆகையால் குடும்ப அட்டை தாரர்களுக்கு சீக்கிரமாக பொருட்கள் வழங்குவதற்கும் தேவையில்லாத பிரச்சினைகளை வராமல் தடுப்பதற்கும். தற்போது பி.ஓ.எஸ். மிஷினுக்கும் எடைதராசிற்கும் உள்ள புளுடூத் இணைப்பை நீக்குவதற்கு ஆவனச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Similar News