தமிழகத்தில் சுமார் 40 முதல் 60 அடி உயரம் கொண்ட பனை மரத்தில் ஏறி தொழில் செய்து வரும் பனைத் தொழிலாளர்களுக்கு காவல்துறையினர் இடையூறுகளை செய்து வருவதாக தமிழ்நாடு பனை தொழிலாளர் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் குற்றச்சாட்டு;
பனைத் தொழிலாளர்கள் பாதுகாப்பு மாநாடு ராமநாதபுரத்தில் விரைவில் நடைபெற உள்ளதால் அது குறித்து தென் மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி விவிடி சாலையில் உள்ள எஸ்டிஆர் ஹோட்டல் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில இணைச் செயலாளர் காமராசு, தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், கலை இலக்கிய அணி செயலாளர் அந்தோணி பிச்சை, ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் டி.ஆர்.சந்திரசேகர், பொருளர் கண்ணன், ஆகியோர் கருத்துரை வழங்கினார். இதில், மாவட்ட செயலாளர்கள் காந்த், தங்கப்பன், காளிமுத்து, வேல்முருகன், கார்த்திக், தங்கவேல், முருகன், சுதாகர் குமார், ரமேஷ் குமார், கண்ணன், அருண்குமார், முருகன், சரவணகுமார், கலந்து கொண்டனர். சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனத்தலைவரும் தமிழ்நாடு பனை தொழிலாளர் நல வாரிய தலைவருமான எர்ணாவூர் நாராயணன் தலைமை தாங்கி பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், தமிழகத்தில் பனைமர தொழிலாளர் நல வாரியத்தில் 15000 பேர் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. பனை தொழிலாளர்கள் பிரச்சனைகள் அனைத்தையும் விவாதிக்காக பெரிய அளவிலான மாநாடு நடத்தப்பட உள்ளது. தங்களது உயிரை பணயம் வைத்து பனைமரம் ஏறி தொழில் செய்து வரும் பனை தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் இடையூறு செய்து வருகின்றனர். எனவே பனை தொழிலாளர்களால் பனைத் தொழில் செய்ய முடியவில்லை. என பல்வேறு மாவட்டத்தில் உள்ளவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.