திரேஸ்புரம் பகுதியில் மீனவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து போதை ஊசி மற்றும் மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகத்தை மூடி காவல்துறையினர் சீல் வைத்ததுடன் விற்பனையில் ஈடுபட்ட மாரி செல்வம் என்ற வாலிபர் மற்றும் மருந்தக உரிமையாளரை கைது செய்து விசாரணை;
தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் மீனவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து போதை ஊசி மற்றும் மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகத்தை மூடி காவல்துறையினர் சீல் வைத்ததுடன் விற்பனையில் ஈடுபட்ட மாரி செல்வம் என்ற வாலிபர் மற்றும் மருந்தக உரிமையாளரை கைது செய்து விசாரணை தூத்துக்குடியில் ஏற்கனவே கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் இளைஞர்கள் மற்றும் மீனவர்களை குறி வைத்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது போதை ஊசிகளும் போதை மாத்திரைகளும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக நகர துணை கண்காணிப்பாளர் மதனுக்கு தகவல் கிடைத்தது இதைத்தொடர்ந்து நகர துணை கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் பேரில் வடபாகம் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர் அப்போது திரேஸ்புரம் கடற்கரைப் பகுதியில் சோதனை மேற்கொண்டனர் அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த லூத்தம்மாள் புறம் பகுதியைச் சேர்ந்த மாரி செல்வம் என்ற நபரை பிடித்து விசாரணை செய்ததில் அவரிடம் இருந்த பையில் டிராமிடால் ஹைட்ரோ குளோரைடு 50 மில்லி கிராம் போதை மருந்துகள் மற்றும் மாத்திரைகள் ஊசிகள் ஆகியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இந்த போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகளை தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியில் உள்ள ஏ எம் எஸ் மெடிக்கல் என்ற மெடிக்கலில் இருந்து வாங்கி இளைஞர்கள் மற்றும் மீனவர்களை குறி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது இதை எடுத்து போதை ஊசி மற்றும் மாத்திரைகளை விற்பனை செய்த ஏ எம் எஸ் மருந்துகத்தை காவல்துறையினர் மூடி சீல் வைத்ததுடன் இந்த சம்பவம் தொடர்பாக மாரி செல்வம் மற்றும் மருந்தக உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் தூத்துக்குடியில் இளைஞர்கள் மற்றும் மீனவர்களை குறி வைத்து போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது