தூத்துக்குடி மாநகராட்சி 51வது வார்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.;
தூத்துக்குடி மாநகராட்சி 51வது வார்டுக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையான சாலை வசதி அமைத்துத் தருவது குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், திமுக வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான பி. கீதா ஜீவன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், வட்டச் செயலாளர் செல்வராஜ், பகுதி பிரதிநிதி அய்யப்பன், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாநகர தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் செந்தில் குமார், மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் சத்யா, இலக்கிய அணியைச் சேர்ந்த ரகு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.