தூத்துக்குடி நகரின் மத்திய பகுதியில் ஃபாரூக் என்பவரது வீட்டு மாடியில் பொருத்தப்பட்டிருந்த ஏசி வெடித்து தீ விபத்து வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதம் அறை முழுவதும் புகைமண்டலமாக காணப்படுவதால் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் தூத்துக்குடி நகரின் மத்திய பகுதியில் உள்ள எம்.கே. தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாரூக் அரிசி வியாபாரம் செய்து வருகிறார் இவரது வீட்டில் இன்று மாடி அறையில் பொருத்தப்பட்டிருந்த ஏசி திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது உடனடியாக அந்த அறையில் இருந்த பாருக் மற்றும் அவரது குடும்பத்தினர் குழந்தைகள் ஆகியோர் அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியே கீழ் பகுதிக்கு வந்தனர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் இந்த தீ விபத்தில் தீ மளமளவென பரவி அந்த அறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது அந்த அறை முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உடனடியாக தீயணைப்புத் துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.