மதுரையில் நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து வென்று தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சியை நிறுவுவதே நம்ம குறிக்கோள். மாற்று சக்தி நாமன்று, முதன்மை சக்தி நாம் என்பதை உலகுக்கு மீண்டும் உணர்த்துவோம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.;

Update: 2025-08-12 15:06 GMT
இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம். நம்மோட அரசியல் பயணத்தில் அடுத்தடுத்த கட்டங்களைத் தாண்டி வர்றோம். இடையில எத்தனை சவால்கள், நெருக்கடிகள் வந்தாலும் எல்லாத்தையும் மக்கள் சக்தியோட அதாவது உங்க ஆதரவால கடவுளோட அருளாள கடந்து வந்துகிட்டே இருக்கோம். வர 2026 சட்டமன்ற தேர்தலுக்கு நாம முழு பேச்சில் தயாராகிட்டு வர்றோம். இந்த சூழலில் நம்முடைய இரண்டாவது மாநில மாநாட்ட ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரை பாரப்பத்தியில நாம நடத்த இருக்கிறது உங்க எல்லோருக்கும் தெரிந்ததுதான். முத்தமிழையும் சங்கம் வச்சு வளர்த்த மதுரையில, நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து நின்னு, ஜனநாயகப் போரில் அவங்கள வென்று தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சியை நிறுவுவதே நம்ம குறிக்கோள் என்ற நிலைப்பாட்டை உறுதி செய்வதுதான் இந்த மாநாடு. அதனாலதான் வைகை மண்ணில் நடக்கும் இந்த மாநாடு, ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது: வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ என்ற தேர்தல் அரசியல் மையக்கருத்த முன்வச்சி நடக்க இருக்குதுன்னு உங்களோட பகிர்ந்து கொள்வதில் ரொம்ப மகிழ்ச்சி. மாநிலம் அதிர மாநாட்டுக்கு தயாராகும் மாற்று சக்தி நாமன்று, முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம் எனத் தெரிவித்துள்ளார்.

Similar News