அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியில் நடைபெற்ற கபடி போட்டியில் வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு வீரர்களுக்கு கை கொடுத்து வாழ்த்தி போட்டிகளை கண்டு ரசித்தார்; போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியில் திமுக தெற்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் இளைஞரணி அமைப்பாளர் அழகு ராமானுஜம் ஏற்பாட்டில் மாபெரும் கபடி போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கபடி அணிகள் பங்கேற்றன. இந்த போட்டிகளில் கபடி வீரர்கள் எதிரணி வீரர்களை வீழ்த்தி கபடி விளையாடியது காண்போரை ரசிக்க வைத்தது. இந்த போட்டியில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு கபடி வீரர்களுக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் கபடி போட்டிகளையும் கண்டு ரசித்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு கோப்பை மற்றும் ரூ 10,000 ரொக்க பரிசம், இரண்டாம் இடங்கள் பிடித்த அணிக்கு பரிசு கோப்பை மற்றும் ரூ 5,000 ரொக்க பரிசும் வழங்கப்பட்டது. இந்த கபடி போட்டியில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பாலகணேஷ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.