தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகையை மத்திய அரசு நிறுத்தியதால் ஏழை மாணவ,மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுகிறது;அந்த நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும்-காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பேட்டி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்,மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர் செயலரும் மாவட்ட ஆட்சியருமான சுகபுத்ரா முன்னிலையில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுத்தலைவரும் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம்தாகூர் தலைமையில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை மூலம் மத்திய அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணித்திடும் பொருட்டு மாவட்டவளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (District Development Coordination and Monitoring Committee) கூட்டம் காலாண்டிற்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அதன்படி 2025-2026 ஆம் நிதியாண்டிற்கான இரண்டாம் காலாண்டிற்கான கூட்டம் இன்று நடைபெற்றது.இதில் விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் தொடர்புடைய மாவட்ட அளவிலான அனைத்து அலுவலர்களிடம்,திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி மாணிக்கம் தாகூர்,கல்வி உதவித்தொகையை வழங்காத மத்திய பாஜக அரசை கண்டித்து மக்களவை உறுப்பினர் சசிகாந்த் செந்தில் திருவள்ளூரில் தொடங்கியுள்ள காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தமது ஆதரவை தெரிவிப்பதாகவும் புதிய கல்விக்கொள்கைக்கு தமிழக அரசு ஆதரவு வழங்காததால் மாநில அரசுக்கு பங்காக வரவேண்டிய நிதியை மத்திய அரசு கொடுக்காமல் நிறுத்தி வைப்பதால் ஏழை மாணவ,மாணவிகளின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும்,பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் முகவரியே இல்லாத கட்சிகளுக்கு ரூ. 4200 கோடி நன்கொடி பெறப்பட்டு அந்தப்பணத்திற்கு செலவும் காட்டப்பட்டுள்ளது.முகவரி இல்லாத கட்சிகளை பயன்படுத்தி பாஜக வளர்ச்சிக்கு அந்த பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.இது சம்மந்தமாக அம்மாநில அரசோ,தேர்தல் கமிஷனோ இதைப்பற்றி விசாரிக்கப்போவதில்லை என வருத்தப்பட்ட எம்.பி மாணிக்கம் தாகூர், வாக்குத் திருட்டை கண்டித்து ராகுல் செல்லும் யாத்திரையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் பாஜகாவின் ஓட்டுத் திருட்டை தேர்தல் கமிஷன் தடுத்தால் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்றார். பேட்டி: மாணிக்கம் தாகூர் - பாராளுமன்ற உறுப்பினர் (விருதுநகர்)