கூலித்தொழிலாளிமாயம்
குமாரபாளையம் பகுதியில்கூலித் தொழிலாளி வீட்டை விட்டுவெளியேறினார்.;
குமாரபாளையம் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன், 60. கூலி. இவர் உடல்நலம் சரியில்லாமல் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் இவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்வதாக கூறிக்கொண்டு இருந்துள்ளனர். இவர் செப். 13ல், மாலை 02:00 மணியளவில் வீட்டை விட்டு வெளியில் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இவரது குடும்பத்தார் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.