தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ மூலக்கரை பகுதியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன் கல்குவாரி அமைக்க அனுமதி அளிக்க கூடாது மேலும் ஸ்ரீ மூலக்கரை பகுதியில் முறையாக அனுமதி பெறாமல் கனிம வளங்களை கொள்ளையடிக்கும் கல்குவாரிகளை மூட வேண்டுமென வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு;

Update: 2025-10-13 12:54 GMT
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ மூலக்கரை பகுதியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன் கல்குவாரி அமைக்க அனுமதி அளிக்க கூடாது மேலும் ஸ்ரீ மூலக்கரை பகுதியில் முறையாக அனுமதி பெறாமல் கனிம வளங்களை கொள்ளையடிக்கும் கல்குவாரிகளை மூட வேண்டுமென வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அமைந்துள்ளது ஸ்ரீ மூலக்கரை பஞ்சாயத்து இங்கு பத்துக்கு மேற்க்கப்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன இதன் காரணமாக அந்த பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு விவசாய மற்றும் கால்நடைகள் பாதிக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது மேலும் அந்தப் பகுதி அருகே உள்ள வனவிலங்கு சரணாலயம் மற்றும் அகழாய்வு நடைபெற்று வரும் சிவகளை பகுதி ஆகியவை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது மேலும் அங்கே செயல்படும் பத்துக்கு மேற்பட்ட கல்குவாரிகள் முறையாக அனுமதி பெறாமல் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துளது இந்த கல்குவாரிகள் மூலம் கனிம வளங்கள் சுரண்டப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது இந்நிலையில் ஸ்ரீ மூலக்கரை பகுதியில் புதிதாக கல்குவாரி அமைக்க பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நையினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி என்பவர் அரசிடம் அனுமதி கேட்டு அதற்கான கருத்துக்கேட்ப்பு கூட்டம் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்று பாதியிலேயே முடிந்தது இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த எஸ் டி பி ஐ கட்சியினர் ஸ்ரீ மூலக்கரை பகுதியில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மகன் கல்குவாரிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக்கூடாது மேலும் ஸ்ரீ மூலக்கரை பகுதியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் முறையாக அனுமதி பெறாமல் கனிம வள கொள்ளையில் ஈடுபட்டு வரும் கல்குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டால் அந்த பகுதி மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்

Similar News