தமிழகத்தில் போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்டுள்ள 7000 நபர்களுக்கு நூற்றி மூன்று கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளதாக தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.;

Update: 2025-10-19 11:27 GMT
தமிழகத்தில் போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்டுள்ள 7000 நபர்களுக்கு நூற்றி மூன்று கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளதாக தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதாஜீவன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர்... கடந்த மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் இதுவரை 34 ஆயிரத்து 987 பள்ளிகளில் படிக்கும் 20 லட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த 15 ஆயிரத்து 364 குழந்தைகளுக்கு 461 கோடி ரூபாய் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கும் ஒன்பது குழந்தைகளுக்கு 27 லட்ச ரூபாய் கூடுதல் நிதியும் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார். தூத்துக்குடியில் கடல் நீரை குடிநீராக மாற்றம் திட்டத்திற்கு 930 கோடி நிதி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என்று கூறினார்.

Similar News