சத்தியமங்கலத்தில் நீலகிரி பாராளுமன்ற தொகுதி அ.ராசா வரவேற்பு நிகழ்ச்சி
சத்தியமங்கலத்தில் நீலகிரி பாராளுமன்ற தொகுதி அ ராசா வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.;
Update: 2024-03-25 11:41 GMT
அ.ராசா வரவேற்பு நிகழ்ச்சி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே உள்ள எஸ் பி எஸ் கார்னரில் நீலகிரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஆ ராசா விக்கு கூட்டணி கட்சி சார்பில் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசி ஆ ராசா முதல்வர் ஸ்டாலின் மூன்று ஆண்டுகளில் மகளிர் இலவச பேருந்து, மகளிர் ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு நல திட்டங்களை செய்து திராவிடம் மாடல் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் செய்து வருகிறார். தமிழர்களுக்கு மோடி அரசு எதுவும் செய்ய வில்லை, நமது முதல்வருக்கு இந்திய நாட்டை காக்க வேண்டிய சவால் உள்ளது. இந்தியாவில் மதசார்பற்ற ஆட்சியை அமைக்கும் சவால் முதல்வருக்கு உள்ளது. மோடி, அமித்ஷா, ஆர்எஸ்எஸ், பயப்படக்கூடிய தலைவராக நமது முதல்வர் உள்ளார். மீண்டும் உங்களுக்கு உழைத்திட மீண்டும் என்னை தேர்ந்தெடுத்தால் உழைக்க தயாராக உள்ளேன் . இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட செயலாளர் நல்லசிவம், துணைச் செயலாளர் கீதா நடராஜன், சத்தி நகர செயலாளர், நகர சேர்மேன் ஜானகி ராமசாமி, சத்தி ஒன்றிய செயலாளர், யூனியன் சேர்மன் இளங்கோ மற்றும் கூட்டணி கட்சி சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.