40 நாள்களாக குடிநீா் இல்லை - கிராம மக்கள் சாலை மறியல்

மணத்தி கிராமத்தில் 40 நாள்களுக்கும் மேலாக குடிநீா் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Update: 2024-02-02 02:17 GMT

பைல் படம் 

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூா் அருகேயுள்ள மணத்தி கிராமத்தில் சுமாா் 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா் இந்த ஊருக்கு புறையூா் வாய்க்கால் கரை பகுதியில் அமைந்துள்ள ஆழ்துளைக் கிணறு மூலம் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வந்தது. கடந்த டிசம்பா் மாதம் பெரு மழை வெள்ளத்தின்போது குடிநீா் குழாய்கள் சேதமடைந்தன.

அவற்றை சீரமைக்கும் பணிகள் மந்த கதியில் நடப்பதால் சுமாா் 40 நாள்களுக்கும் மேலாக குடிநீா் வழங்கப்படவில்லை எனக் கண்டித்தும், ஒரு வாரமாக லாரி மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீா் குடிநீருக்கு பயன்படாத நிலையில் உள்ளதால் விரைந்து குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக் வேண்டும் என வலியுறுத்தியும் திருநெல்வேலி-திருச்செந்தூா் சாலையில் கா­லி குடங்களுடன் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் ஆழ்வாா்திருநகரி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் நாகராஜன் பேச்சு நடத்தி குழாய் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து தடையின்றி குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா். இதையேற்று மக்கள் கலைந்து சென்றனா். இப்போராட்டத்தால் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News