பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை - போஸ்டரால் பரபரப்பு
பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என அதிமுக நிர்வாகிகள் மாவட்டம் முழுவதும் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;
Update: 2024-06-14 04:04 GMT
ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்
சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், மானாமதுரை பகுதிகளில் அஇஅதிமுக மாவட்ட மாணவரணி சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் அதிமுக நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமல்ல வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்த கழக பொதுச்செயலாளர் புரட்சி தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கோடான கோடி நன்றி என தெரிவித்து மாவட்ட மாணவரணி பொருளாளர் வழக்கறிஞர் மணலூர் மணிமாறன் என்பவர் போஸ்டர் ஒட்டி ஒட்டுமொத்த தொண்டர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் வெளிப்படுத்தியுள்ளார்.