தாவிரவியல் பூங்காவில் செயல்படாத நீருற்று- சுற்றுலாபயணிகள் அதிருப்தி.

Update: 2023-11-16 06:11 GMT

செயல்படாத நீருற்று

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

உலக சுற்றுலா பயணிகள் அனைவரையும் அற்புதமாக கவர்ந்து இழுக்கும் ஊட்டி தாவிரவியல் பூங்கா பல நூற்றாண்டு பழமையும் பெருமையும் வாய்ந்த ஒரு அற்புதமான சுற்றுலா தலம் ஆகும். ஆங்கிலேயர் பார்த்து பார்த்து செதுக்கிய பரவசம் தரும் இந்த தாவிரவியல் பூங்காவில் காலத்திற்கு ஏற்றார் போல் பல புதுமைகளை செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஆனால் எந்த ஒரு புதுமைகளும் இல்லாமல் சிறப்பான பராமரிப்பகளும் இல்லாமல் தள்ளாடுவதாக சுற்றுலா பயணிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தினால் இது இன்னும் சிறப்பாக இருக்கும், பூங்காவின் மேல் தளத்தில் அமைக்கபட்ட செயற்கை நீர்வீழ்ச்சி பராமரிப்பு இல்லாததால் பரிதாப நிலையில் உள்ளது. இதில் தண்ணீர் வருவதே இல்லை. இரவில் ஔிரும் விளக்கு உள்ளது. ஆனால் ஔிர்வதில்லை.இங்கு அமைக்கபட்ட விலங்குகளின் உருவங்கள் பொலிவிழந்து வருகின்றன. உலக பிரசித்தி பெற்ற ஊட்டி தாவிரவியல் பூங்காவில் புதிய புதுமைகளை புகுத்தாவிட்டாலும் இருப்பவைகளை பராமரித்தாலே போதும் என்ற நிலைதான் காணப்படுகிறது.

Tags:    

Similar News