நடைமுறைப்படுத்தாத தேர்தல் விதிமுறைகள் !

தமிழகத்தில், லோக்சபா தேர்தல் ஒரே கட்டமாக ஏப். , 19ல் நடக்கிறது. இந்த அறிவிப்பு வந்த மார்ச் 16ல் இருந்தே, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததாக, தேர்தல் ஆணையம் அறிவித்தது.

Update: 2024-03-29 06:12 GMT

கல்வெட்டு

தமிழகத்தில், லோக்சபா தேர்தல் ஒரே கட்டமாக ஏப். , 19ல் நடக்கிறது. இந்த அறிவிப்பு வந்த மார்ச் 16ல் இருந்தே, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததாக, தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, செங்கல்பட்டு புறநகர் பகுதிகளான சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், காட்டாங்கொளத்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், நிழற்குடை உள்ளிட்டவற்றில் இருந்த கல்வெட்டுகள் மறைக்கப்பட்டன. ஆனாலும், கிராமப்புறங்களில் ராட்சத உயர கொடிக்கம்பங்கள் மறைக்கப்பட்டு, அதில் இருந்த கட்சிக் கொடிகள் மட்டும் அகற்றப்பட்டன. அதேபோல, ஊராட்சிகளில் அமைக்கப்பட்டு உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உள்ள முதல்வர் மற்றும் எம். எல். ஏ. , க்கள் பெயர்கள் மறைக்கப்படவில்லை. அதேபோல, செங்கல்பட்டு ரயில்வே மேம்பாலத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் கொண்ட கல்வெட்டுகளும் மறைக்கப்படவில்லை.
Tags:    

Similar News