தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியும் இடம் மாறாத அதிகாரிகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியும் அதிகாரிகள் இடம் மாறாமல் உள்ளனர்.;

Update: 2024-01-23 15:53 GMT

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

அரசு துறைகளில் ஒரே இடத்தில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியிருந்தது.

இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில், வருவாய் துறை, காவல் உள்ளிட்ட பல்வேறு துறையில், நீண்ட நாட்களாக பணியாற்றிய அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

ஆனால், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில், பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படாமலேயே உள்ளனர். ஒரே தொகுதியில் பணியாற்றுவோரையும் இடமாற்றம் செய்ய தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியிருந்தது.

அவ்வாறு, சொந்த தொகுதியில் பணியாற்றுவோரையும், நீண்ட நாட்களாக பணியாற்றுவோரையும் இடமாற்றம் செய்யப்பட வேண்டும். ஆனால், தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது."

Tags:    

Similar News