காதலியுடன் தகராறு - வடமாநில தொழிலாளி தற்கொலை

சேலம் மாவட்டம், ஏற்காடு அருகே காதலியுடன் ஏற்பட்ட தகராற்றால் வடமாநில தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2024-04-19 02:36 GMT

தற்கொலை

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம்சிங் நாத். இவரது மகன் சம்பர்நாத் சிங் (வயது 20). இவர் ஏற்காடு காவிரி பீக் பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டில் தங்கி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று காலை அவருடன் தங்கி இருந்த நண்பர்கள் வேலைக்கு புறப்பட்டனர். சம்பர்நாத் சிங் தனக்கு உடல்நிலை சரி இல்லை. இதனால் வேலைக்கு வரவில்லை என கூறிவிட்டு அறையிலேயே தங்கி இருந்தார். பின்னர் மதியம் நண்பர்கள் அறைக்கு வந்தனர்.

Advertisement

அப்போது சம்பர்சிங் நாத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் ஏற்காடு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நண்பர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது சம்பர்சிங் நாத் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததும், இவர்களுக்குள் போனில் தகராறு ஏற்பட்டதும், இதில் மனமுடைந்த சம்பர் நாத் சிங் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

பின்னர் போலீசார், தற்கொலை செய்த சம்பர்நாத் சிங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News