பேப்பர் அரைக்கும் இயந்திரத்தில் விழுந்து வட மாநிலத் தொழிலாளர் பலி

பேப்பர் அரைக்கும் இயந்திரத்தில் விழுந்து வட மாநிலத் தொழிலாளர் பலியானர்.;

Update: 2023-12-05 09:29 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே என்.சுப்பையாபுரத்தில் கோவில்பட்டியை சேர்ந்த சூர்யா என்பவருக்கு சொந்தமான அட்டை மில் செயல்பட்டு வருகிறது. இந்த அட்டை மில்லில் பிகார் மற்றும் உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 80 பேர் உள்பட 100க்கு மேற்பட்டவர் கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை அட்டை மில்லில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது பிகார் மாநிலத்தை சேர்ந்த சவுரவ் குமார் (20) என்ற இளைஞர் பேப்பர் அரைக்கும் இயந்திரத்தில் பணியில் இருந்த போது எதிர்பாராத விதமாக பேப்பர் அரைக்கும் இயந்திரத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

Advertisement

இந்த நிலையில் அருகில் இருந்தவர் கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தாலுகா போலீசார் அரவை இயந்திரத்தில் சிக்கி பலியான சவுரவ் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக சாத்தூர் அரசு மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News