திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த வட மாநில தொழிலாளி கைது

ஊத்துக்குளியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த வட மாநில தொழிலாளி கைது - 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்.

Update: 2024-02-12 05:15 GMT

கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த வட மாநில தொழிலாளி கைது

திருப்பூர் ஊத்துக்குளியில், கஞ்சா சாக்லெட்டுகளை விற்பனை செய்த வடமாநில தொழிலாளி கைது. 2 கிலோ கஞ்சா சாக்லெட்கள் பறிமுதல். திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த சிலர் கஞ்சா சாக்லேட்டை ரயில் மூலம் கடத்தி வந்து விற்பனை செய்வதாக ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், ஊத்துக்குளி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, பூசாரிபாளையத்தில் சந்தேகப்படும் விதமான நபர்களிடம் விசாரணை கொண்டனர். விசாரணையில் அதேபகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சாகதிப் மாலிக் என்பவர் ஒடிசாவிலிந்து ரயில் மூலம்  கடத்தி வந்து கஞ்சா சாக்லெட் விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து சாகதிப் மாலிக்கை கைது செய்த போலீசார், விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ அளவுள்ள கஞ்சா சாக்லெட்களையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News