திருப்பூரில் ரெயிலில் வந்த வடமாநில வாலிபர் சாவு
திருப்பூரில் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜிபின் என்பவர் ரெயிலில் வந்தபோது மூச்சு திணல் ஏற்பட்டு மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
Update: 2024-05-14 15:00 GMT
வடமாநில தொழிலாளி பலி
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ஜிபின் (வயது 36) இவர் தனது நண்பருடன் கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு வேலைக்கு வந்துள்ளார். சென்னை-மங்களூர் ரெயிலில் வந்தவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ரெயில் ஈரோடு ரயில் நிலையம் தாண்டியபோது ஜிபினுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கினார்.
இந்நிலையில் நேற்று காலை திருப்பூர் ரயில் நிலையம் வந்ததும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருப்பூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.