வடமாநில தொழிலாளி - தமிழன் கழுத்தறுப்பு முயற்சி
தமிழர்களை தொடர்ச்சியாக கிண்டல் செய்து வந்த வடமாநில ஓட்டல் தொழிலாளியை திருநெல்வேலியை சேர்ந்தவர் கழுத்தறுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-19 06:39 GMT
தமிழர்களை கேலி செய்த வடமாநில தொழிலாளி - கழுத்தை அறுக்க முயற்சி
வத்தலக்குண்டு பைபாஸ் சாலையிலுள்ள தனியார் ஓட்டலில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த சங்கர் (47) வேலைபார்த்து வருகிறார். அதே ஓட்டலில் அசாம் மாநிலத்தை சேர்ந்த சூட்டுமாஜி (30) என்பவரும் அங்கேயே தங்கி வேலை பார்த்து வருகிறார்.இந்த நிலையில் சூட்டுமாஜி தமிழர்களை கிண்டல் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதனை சங்கர் பலமுறை கண்டித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த சங்கர் வெங்காயம் நறுக்கும் கத்தியை எடுத்து சூட்டுமாஜியின் கழுத்தை அறுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.