பஜாரில் ஆயுதங்கள் விற்ற வட மாநிலத்தினர் கைது
திருநெல்வேலி மாவட்டம்,சீவல்ப்பேரி பகுதியில் ஆயுதங்களை விற்ற வடமாநிலத்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.;
Update: 2024-01-27 12:17 GMT
ஆயுத விற்பனை
நெல்லை மாவட்டம், சீவலப்பேரி மெயின் பஜார் பகுதியில் இன்று காலை ராஜஸ்தானை சேர்ந்த இரண்டு பேர் வாள், கத்தி, சிறிய அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்பனை செய்து வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீவலப்பேரி காவல்துறையினர் பொருட்களை பறிமுதல் செய்து இருவரையும் காவல் நிலையத்திற்கு கைது செய்து அழைத்துச் சென்றனர்.மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.