தேர்தலுக்கு ஊதியத்துடன் விடுமுறை அறிவிப்பு

மக்களவை தேர்தல் நடைபெறும் வரும் 19ம் தேதி, தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-12 11:53 GMT

லோக்சபா தேர்தல் நடைபெறும் வரும் 19ம் தேதி, தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும், அவ்வாறு அளிக்கப்படவில்லை என்றால், புகார் தெரிவிக்கலாம் என, தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து காஞ்சிபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் சுதா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்படுள்ளதாவது,

தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு ஏப்., 19ல் நடக்கிறது. அன்றைய தினம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள்,மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை பணியாளர்கள், தொழிலாளர்கள் ஓட்டளிக்கும் பொருட்டு, ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுவதை கண்காணிக்க ஏதுவாகவும், இது தொடர்பான புகார் தெரிவிக்க காஞ்சிபுரம் மாவட்ட, தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இது தொடர்பான புகார்களை, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், தொழிலாளர் உதவி ஆணையர் - அமலாக்கம் 94428 32516, காஞ்சிபுரம் தொழிலாளர் துணை ஆய்வர் 97899 48409, பரங்கிமலை தொழிலாளர் துணை ஆய்வர், 98408 11411 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம், 99408 56855, செங்கல்பட்டு தொழிலாளர் உதவி ஆய்வர் 95855 21537, செங்கல்பட்டு முத்திரை ஆய்வர் 81487 37993 ஆகிய மொபைல் போன் எண்களில் புகார் அளிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News