நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்!

ஆரணி நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கு.பாக்கியலட்சுமி வேட்புமனு தாக்கல் செய்ய முருகர், சிவன் வேடமிட்டு வந்தார்.

Update: 2024-03-27 07:34 GMT

வேட்புமனு தாக்கல் 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி முருகர், சிவன் வேடமிட்டு தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து ஆரணி உதவி ஆட்சியர் பாலசுப்பிரமணியனிடம் 2 வேட்பு மனுவும், அவருக்கு மாற்று வேட்பாளராக பாரதிசிவசங்கரி ஒரு வேட்பு மனுவும் தாக்கல் செய்தனர். மேலும் சுயேட்சை வேட்பாளர்கள் தாமோதரன், சேகர், மனவாளன் என மொத்தம் 6 வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News