உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழப்பு: உரிய விசாரணை
உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-25 14:07 GMT
அமைச்சர் மா. சுப்ரமணியன்
புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர் ஹேமச்சந்திரன் உடல் பருமனை குறைக்க சென்னையில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது உயிரிழந்த நிலையில் சம்பவம் குறித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் இளைஞரின் உறவினர்களிடம் விசாரித்தார்.
அதில் இளைஞர் உடல் பருமன் சிகிச்சையில் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த குழு அமைக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என தெரிவித்தார்.
நேற்று இரவு தொலைபேசியில் தொடர்புகொண்ட அமைச்சர் மா சுப்பிரமணியன் இளைஞரின் உறவினர்களிடம் ஆறுதல் கூறினார். மேலும் இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒரு தெரிவித்தார்.