மதுபோதையில் ஆபாச பேச்சு - இந்து அமைப்பு நிறுவனர் ஆடியோ வைரல்
மது போதையில் இந்து அமைப்பின் நிறுவனர் காவல் நிலையத்திலும் , காவலர்களிடமும் செல்போனில் அருவருக்கத்தக்க வகையில் பேசும் ஆடியோ, வீடியோ வைரலாகி வருகிறது.
திருப்பூரில் மது போதையில் இந்து அமைப்பு நிறுவனர் ஒருவர் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசை வசைபாடும் வீடியோ, ஆடியோ ஆகியவை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்ிற்கு மது போதையில் வந்து பேசிய அகில பாரத இந்து சாம்ராஜ்ய நிறுவனர் செந்தில்குமார் வேசி மகன் என்று சொன்ன ராசாவை கைது செய்ய கையிலாகாத காவல்துறை என்று பேசிய அவர் தொடர்ந்து தகாத வார்த்தையால் வசைபாட ஆரம்பித்து விட்டார்.
அதனைத் தொடர்ந்து இந்த போலீசு நிலையத்தில் கிறிஸ்தவர்களும் முஸ்லிமும் தான் பணியாற்றுகிறீர்களா எனவும் உங்கள் தாயைப் பற்றி பேசினால் கோபம் வராதா எனவும் அது போதையில் பயங்கர சத்தத்தில் பேசுகிறார் பணியாற்றும் போலீசார் செந்தில்குமாரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்த வீடியோ வைரலாகியுள்ளது. அதேபோல் அதே காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் ஒருவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரை தரக்குறைவாக பேசும் ஆடியோவும் வைரலாகி வருகிறது.
அதில் போலீசாருக்கு நான் தான் மாமூல் வாங்கி கொடுக்கிறேன். நானும் கட்சி நிதி என்ற பெயரில் மாமூல் வாங்கிக் கொள்கிறேன். என்னை டாஸ்மாக் கடையில் மிரட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க கைலாகாத காவல்துறை. காவல்துறைக்கு சங்கம் இருந்தால் தான் சரியாக வேலை செய்வீர்கள் என பேசி வசைபாடும் ஆடியோவும் வருகிறது. மேலும் சில ஆடியோகளில் கலெக்டரை பற்றியும் தாசில்தாரை பற்றியும் மாமூல் வாங்க வந்த ஆட்சியர் என மது போதையில் தகாத வார்த்தைகளில் பேசும் ஆடியோவும் பரவுகிறது.