ராமநாதபுரம் : உலக மண் தினம் அனுசரிப்பு
ராமநாதபுரம்பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் உலக மண் தினம் கொண்டாடப்பட்டது
Update: 2023-12-08 06:58 GMT
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் உலக மண் தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்த வருடம் உலகளவில்,மண் மற்றும் நீர் வாழ்வின் ஆதாரம் என்ற தலைப்பின் கீழ் உலக மண் தினம் கொண்டாடபட்டது. மண் அறிவியல் உதவி பேராசிரியர் அரவிந்த் குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரி தலைவர் அகமது யாசின் இவ் விழாவிற்கு முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயக்குமார் தலைமையுரையாற்றினார்மண் அறிவியல் உதவி பேராசிரியர் அபிநயா உலக மண் தினத்தை பற்றியும் மண் வளத்தை காப்பதற்கான தமிழக அரசின் திட்டங்களாகிய மீண்டும் மஞ்சபை, மண் பரிசோதனை, இயற்கை விவசாயம் போன்ற வற்றின் முக்கியத்து வத்தை மாணவர் களிடத்தில் எடுத்து ரைத்தார். துணை முதல்வர் திருவேணி, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். உதவி பேராசிரியர் அரவிந்த் குமார், மற்றும் உதவி பேராசிரியர் அபிநயா இவ்விழாவை ஒருங்கி ணைத்தனர்.