செய்யூரில் சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள கல்லால் இடையூறு

செய்யூரில் சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள கல்லால் இடையூறு ஏற்பட்டுள்ளது.

Update: 2024-06-23 15:06 GMT
சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள கல், பகுதிவாசிகளுக்கு இடையூறு

செய்யூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேற்கு செய்யூர் கிராமத்தில் உள்ள புதிய பேருந்து நிறுத்தம் பின்புற சாலையில், ஆறு மாதங்களுக்கு முன் ஊராட்சி நிர்வாகம் வாயிலாக, பொது நிதியில் இருந்து 70 மீட்டர் நீளத்திற்கு பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது. 

 இந்நிலையில், சாலை அருகே உள்ள இடத்திற்கு சொந்தமான தனிநபர், தனக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்தபோது, இடம் சாலை மையப்பகுதி வரை இருந்ததாக கூறி, சாலை நடுவே வேலி அமைக்க பள்ளம் தோண்டி, கல் நடப்பட்டு உள்ளது.

மேலும், சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள கல், இந்த வழியாக சென்று வரும் பகுதிவாசிகளுக்கு இடையூறாக உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், சாலை அமைக்கும் முன், முறையாக அளவீடு செய்யாமல் சாலை அமைத்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Tags:    

Similar News