ஈரோடு பேருந்து நிலையத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் !
ஈரோடு பேருந்து நிலையத்தில் கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என ஈரோடு மண்டல பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.
By : King 24x7 Angel
Update: 2024-02-29 12:16 GMT
வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுகிழமைகளில் பயணிகளின் வசதிக்காக ஈரோட்டிலிருந்து கோவை, திருச்சி, மதுரை, சென்னை, திருச்செந்தூர், இராமேஸ்வரம், திருவண்ணாமலை, பழனி போன்ற ஊர்களுக்கு தற்போது இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என ஈரோடு மண்டல பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.