அனுமன் தீர்த்தம் பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கல்

அனுமன் தீர்த்தம் பகுதியில் தை அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிப்பாடு நடத்தப்பட்டது.

Update: 2024-02-09 15:02 GMT

 கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அனுமன் தீர்த்தம் பகுதியில் அமைந்துள்ள அனுமந்தீஸ்வரர் ஆலயம் தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ளது தை அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர் நிலைகளின் அருகாமையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருவது வழக்கம்.

இந்த நிலையில் ஊத்தங்கரை அடுத்த அனுமன் தீர்த்தம் பகுதியில் உள்ள அனுமந்தீஸ்வரர் ஆலயம் பகுதியில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

இந்த நிகழ்வில் ஊத்தங்கரை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் அருகிலுள்ள தர்மபுரி அரூர் திருப்பத்தூர் திருவண்ணாமலை செங்கம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு சென்றனர்

Tags:    

Similar News