"மது கூடத்தில் மேலாளர் ஆய்வு"

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கேசவன் அவ்வப்போது ஆய்வு நடத்தி வருகிறார்;

Update: 2024-04-01 10:26 GMT

ஆய்வு

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்தில், 93 டாஸ்மாக் கடைகள், 42 மதுக்கூடங்கள் இயங்கி வருகின்றன. இதில், முறைகேடாக மது விற்பனையை தடுக்கும் நடவடிக்கையாக, ஒவ்வொரு நாள் இரவு மற்றும் காலை நேரங்களில், மதுக்கூடத்துடன் இருக்கும் மதுபான கடையை ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கேசவன் அவ்வப்போது ஆய்வு நடத்தி வருகிறார். அதன்படி, நேற்று காலை வாலாஜாபாத் மதுக்கூடத்தை ஆய்வு செய்தார். இதனால், முறைகேடாக மது விற்பனை தடுக்கப்பட்டுள்ளது என, டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News