கோவையில் புகாரை தொடர்ந்து தேசியக் கொடியை மாற்றிய அதிகாரிகள்

கோவையில் புகாரை தொடர்ந்து தேசியக் கொடியை அதிகாரிகள் மாற்றினர்.

Update: 2023-12-26 12:34 GMT

கோவை காந்தி மாநகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி.கடந்த 24ம் தேதி தனது மகள்களுக்கு ஆதார் எண் திருத்தம் செய்ய கோவை ரயில் நிலையத்தில் அமைந்துள்ள தபால் நிலையம் வந்துள்ளார்.

பணிகளை முடித்து வெளியே வந்தபோது அவரது மகள் நுழைவாயில் முன் அமைக்கபட்டுள்ள 100 அடி உயரம் உள்ள கொடி கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ள தேசிய கொடியில் அசோக சக்கரம் ஊதா நிறத்தில் இருப்பதை தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அசோக சக்கரம் நீல நிறத்தில் தான் இருக்க வேண்டும் வண்ணம் மாறி இருக்க கூடாது என எழுதி ரயில் நிலைய இயக்குனரிடம் பழனிச்சாமி மனு அளித்துள்ளார்.மாலைக்குள் கொடியை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கபடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மறுநாள் மீண்டும் ரயில் நிலையம் சென்று பார்த்தபோது கொடி மாற்றபடாமல் இருப்பதை கண்டவர் ரயில் நிலைய இயக்குனரிடம் இதுகுறித்து கேட்டபோது கட்டாயம் மாற்றபடும் எனவும் என கூறியதுடன் அப்போது பழிச்சாமியை அழைப்பதாக அதிகாரிகள் தரப்பிப் தெரிவிக்கபட்டது.

இதனை தொடர்ந்து நேற்று மாலை தேசிய கொடி முறைப்படி இறக்கபட்டு புதிய கொடி பறக்கவிடப்பட்டது.

Tags:    

Similar News