பட்டாசு கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வார காலமே முழுமையாக உள்ளதால், பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில், தற்காலிக பட்டாசு கடைகள் கணிசமாக அமைக்கப்பட்டு வருகிறது.. இந்நிலையில் பள்ளிபாளையம் குமாரபாளையம் பகுதிகளில் செயல்படும் ரெகுலர் பட்டாசு கடைகளில், அதிகாரிகள் முன் எச்சரிக்கை பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளிபாளையம் சங்ககிரி சாலையில் செயல்படும் தனியார் ரெகுலர் பட்டாசு கடையில், பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சுகுமார், குமாரபாளையம் தாசில்தார் சண்முகவேல், கிராம நிர்வாக அலுவலர் தியாகராஜன், தீயணைப்புத்துறை அதிகாரிகள், தொழில்துறை நல அதிகாரி உள்ளிட்டோர் கூட்டு தணிக்கை மேற்கொண்டனர். கடைகளில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சுகுமார் கூறும் பொழுது, தீபாவளி பண்டிகையை ஒட்டி பள்ளிபாளையம் பகுதியில் தற்காலிக பட்டாசு கடைகள் தற்போது அமைக்கப்பட்டு வருகிறது.. தற்போது முதல் கட்டமாக கூட்டுத் தணிக்கை குழு மூலமாக ரெகுலர் பட்டாசு கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. வார இறுதியில் மொத்தம் எத்தனை தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்படும் என தெரியவரும்! அதன் பிறகு அந்தந்த கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.