ஹோட்டல்களில் அதிகாரிகள் திடீர் சோதனை: 11 கடைகளுக்கு அபராதம்

தூத்துக்குடி மாவட்டம்,பேய்க்குளத்தில் கடை, ஹோட்டல்களில் சுகாதாரத்துறையினர் திடீர் சோதனை நடத்தி 11 கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.;

Update: 2024-05-14 15:43 GMT

சுகாதார துறையினர் ஆய்வு 

தூத்துக்குடி மாவட்டம், பேய்க்குளம் பகுதியில் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை மற்றும் ஹோட்டல்களில் சுகாதாரம் கேடு தொடர்பாக ஆழ்வார்திருநகரி வட்டார சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ஜேசுராஜ், மகேஸ்குமார், ஜான்விமல் சுனில் தர்ஷன், தருவடி ஞானராஜ், அனிஷ், அஸ்வின் ஆகியோர் திங்கள்கிழமை திடீரென சோதனை நடத்தினர்.

இதில் 11 கடைகளுக்கு அபராதம் விதித்தனர். சுகாதாரத்தை பேணுவது தொடர்பாக சுகாதார ஹெல்த் நோட்டீஸ் கடைகளுக்கு விநியோகிக்கப்பட்டது.

Tags:    

Similar News