ஆக்கிரமிப்புகளை அகற்ற தயக்கம் காட்டும் அதிகாரிகள்
ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்ற தயக்கம் காட்டுவதாக பொதுமக்கள் குற்ற சாட்டியுள்ளனர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-18 10:56 GMT
இடம் ஆக்கிரமிப்பு
வத்தலக்குண்டு, : விராலிப்பட்டியில் ஓடையை ஆக்கிரமித்து தனியார் கட்டடம் கட்டியதால் கண்மாயில் சேரும் ஓடை துண்டிக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு மேலாக முயற்சித்தும் வருவாய்த்துறை,நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் மக்கள் கவலையடைந்தனர்.
காலங்காலமாக இந்த ஓடை வழியாக பெருமளவு தண்ணீர் கண்மாய்க்கு சென்று சேர்வதால் முக்கிய நீர் ஆதாரமாக பார்க்கப்படுகிறது. இந்த ஓடையை மறித்து தனி நபர் ஒருவர் திருமண மண்டபம் கட்டினார். இதனால் ஓடை திருமண மண்டபத்தோடு தடைபட்டு போனது.மழை காலங்களில் வரும் தண்ணீர் ஊராட்சி அலுவலகத்துக்கு எதிரே தேங்கி நின்று சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறது.