கருங்கல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை சிறைப்பிடித்த அதிகாரிகள்

நத்தம் அருகே அனுமதியின்றி கருங்கல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை மடக்கி பிடித்த கனிம வளத்துறை பறக்கும் படை அதிகாரிகள், காவல்துறை வசம் ஒப்படைத்தனர்.

Update: 2024-05-25 05:59 GMT

நத்தம் அருகே அனுமதியின்றி கருங்கல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை மடக்கி பிடித்த கனிம வளத்துறை பறக்கும் படை அதிகாரிகள், காவல்துறை வசம் ஒப்படைத்தனர்.

திண்டுக்கல் அருகே கருங்கல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை அதிகாரிகள் சிறைப்பிடித்தனர். திண்டுக்கல் மாவட்டம் கனிம வளங்களால் நிறைந்த மாவட்டம். இங்கு மணல் மற்றும் கனிம பொருட்கள் கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. இது குறித்து பொதுமக்கள் அதிகரிதம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என ஆதங்கம் அப்போது எழுந்த வண்ணம் உள்ளது. நத்தம் அருகே அனுமதியின்றி கருங்கல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை மடக்கி பிடித்த கனிம வளத்துறை பறக்கும் படை அதிகாரிகள் நத்தம் காவல்துறை வசம் ஒப்படைத்தனர்.

Officials seized a tipper truck loaded with black stoneஇதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். நத்தம் பகுதியில் தொடர்ந்து கனிவு வளங்கள் கடத்தப்படுவதால் அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News