தளபதிசமுத்திரம் அருகே ஒருவர் பிணமாக மீட்பு
திருநெல்வேலி மாவட்டம், தளபதி சமுத்திரம் பகுதியில் முதியவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-05-07 07:54 GMT
சடலமாக மீட்கப்பட்டவர்
திருநெல்வேலி மாவட்டம், தளபதி சமுத்திரம் அருகே உள்ள கீழூரில் இன்று (மே 7) 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்தில் வந்த வள்ளியூர் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வள்ளியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.