நாகை அருகே திருமருகல் வடகரையில் தூக்கிட்டு முதியவர் தற்கொலை
நாகை அருகே திருமருகல் வடகரையில் தூக்கிட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.;
Update: 2024-03-24 15:12 GMT
காவல்துறை விசாரணை
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வடகரை ஊராட்சி வள்ளுவன் தெருவை சேர்ந்தவர் அறிவுமணி மகன் பாலையன் (வயது 75) கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.இதனால் மனைவி வீட்டில் உள்ள கஷ்டம் தெரியாமல் குடித்துவிட்டு வேலைக்கு போகாமல் இருப்பது சரிதான என கண்டித்துள்ளார்.இதில் மனமுடைந்த பாலையன் நேற்று முன்தினம் வீட்டின் கொல்லைப்புறத்தில் உள்ள முருங்கை மரத்தில் தனது வேட்டியால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.அங்கு தீவிர சிகிச்சை பிரிவு சிகிச்சை பெற்று வந்த பாலையன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து தகவல் அறிந்த திருக்கண்ணபுரம் போலீசார் பாலையன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.