முதியவர் பூச்சி மாத்திரை சாப்பிட்டு பலி
கோக்கலை கிராமத்தில் முதியவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் பூச்சிகொல்லி மருந்து சாப்பிட்டு விபரீத முடிவு செய்துகொண்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-07 11:32 GMT
முதியவர் பூச்சி மாத்திரை சாப்பிட்டு பலி
எலச்சிபாளையம் அருகேயுள்ள, கோக்கலை கிராமம், இடையார்பாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் வீரமுத்து72. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை 10;30க்கு உயிரிழந்தார். வீரமுத்துவின் மனைவி கடந்த சிலவருடங்களுக்கு முன்னர், இறந்துவிட்டார். திருமணமான நிலையில் இரண்டு மகன்கள் உள்ளனர். இதுசம்மந்தமாக, எலச்சிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.