மேலப்பாளையத்தில் இறந்து கிடந்த முதியவர்: போலீசார் விசாரணை
மேலப்பாளையத்தில் இறந்து கிடந்த முதியவர் உடலை போலீசார் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-23 11:54 GMT
முதியவர் சடலம் மீட்பு
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகே நேற்று (ஜூன் 22) மாலை 65 வயது மதிக்கத்தக்க முதியோர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேலப்பாளையம் போலீசார் மற்றும் தமுமுக மருத்துவர் அணி மாவட்ட செயலாளர் பாஷா, குதா முகமது உள்ளிட்டோர் விரைந்து சென்று உடலை மீட்டனர்.
பின்னர் உடலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைத்தனர். இறந்த நபர் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.